Home இலங்கை சமூகம் புத்தளம் மஹாவெவயில் நீரில் மூழ்கி மாணவன் பலி

புத்தளம் மஹாவெவயில் நீரில் மூழ்கி மாணவன் பலி

0

புத்தளம் (Puttalam) – ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ, நல்லதரன்கட்டுவ, இலக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய தினேத் சத்சர என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

தாயின் சகோதரி, அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் மற்றுமொரு அயலவர் ஆகியோருடன் நீராடுவதற்காகச் சென்றபோதே மேற்படி மாணவன் இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

மேலதிக விசாரணை

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/student-drowned-in-puttalam-1713694091

NO COMMENTS

Exit mobile version