ஹோமாகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 மாணவர்களும் ஒரு மாணவியும் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஹோமாகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சேதம் விளைவித்து அதன் ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய குற்றச்சாட்டில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மற்றும் மாணவி ஒருவரை ஹோமாகம பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர்.
குறித்த விடுதியில் குறித்த மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்தின் போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இரு பிரிவினருக்கு இடையே மோதல்
இந்த மோதலில் காயமடைந்த ஹோட்டல் ஊழியர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்று 30 ஆம் திகதி இரவு ஹோமாகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்தினை ஏற்பாடு செய்திருந்த நிலையில், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் தீவிரமடைந்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அவசர இலக்கமான 119 ஊடாக அறிவிக்க ஹோட்டல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததையடுத்து, விடுதி கட்டணத்தை செலுத்தாமல் மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
பிணையில் விடுதலை
இதன்போது ஹோட்டல் ஊழியர்கள் ஏற்கனவே கதவுகளை மூடிவிட்டதால், மாணவர்கள் சுவர் மற்றும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 11 மாணவர்களும் ஒரு மாணவியும் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – நாளை முதல் புதிய விலை
வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |