Home இலங்கை சமூகம் மாணவி கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டு 29 ஆண்டுகள்

மாணவி கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டு 29 ஆண்டுகள்

0

யாழில் (Jaffna) இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (07.09.2025) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் – நல்லூர் செம்மணி வளைவில் இடம் பெற்றுள்ளது.

1996 ஆம் ஆண்டு செம்மணி முகாமில் நிலை கொண்டிருந்த படையினரால் கைது செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமி கூட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் செப்ரெம்பர் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

இராணுவத்தினருக்கு மரண தண்டனை 

அவரை தேடிச் சென்ற தாய், தம்பி, அயலவரும் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இது தொடர்பான வழக்கில் 6 இராணுவத்தினருக்கு மரண தண்டனை
விதிக்கப்பட்டது.

எனினும் இந்த வழக்கில் இராணுவ உயரதிகாரிகள் பலர் தப்பிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் உள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா

https://www.youtube.com/embed/4-azednyR-8

NO COMMENTS

Exit mobile version