Home இலங்கை சமூகம் பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மரணம்

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மரணம்

0

தென்னிலங்கையில் பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் பெந்தோட்டையில் உள்ள காமினி கல்லூரியில் படித்து வந்த 7 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதய கோளாறு

மாணவன் நீண்ட காலமாக இதய கோளாறுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version