Home இலங்கை பொருளாதாரம் எரிபொருள் மானியம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் மானியம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

0

செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து ஒரு லிட்டர் டீசலுக்கு 80 முதல் 100 ரூபாய் வரை மானியம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விற்பனை மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உள்ளிட்ட எரிபொருள் விற்பனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த தரவுகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மானியத் தொகை

அந்தத் தரவுகளை ஆய்வு செய்த பின்னரே துல்லியமான மானியத் தொகை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்படவுள்ள நிலையில், தற்போதைய விலைகளைத் தக்கவைப்பதிலும் டீசல் விலையை உயர்த்துவதைத் தவிர்ப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையில், கச்சா எண்ணெய் விலையானது அமெரிக்க WTI சந்தையில் ஒரு பீப்பாய்க்கு சுமார் 92.41 அமெரிக்க டொலராகவும், பிரெண்ட் (Brent) 104.03 அமெரிக்க டொலராகவும் வர்த்தகமாகி வருகிறது.

Source: https://tamilwin.com/article/subsidy-of-fuel-this-month-anura-karunathilaka-1790415266

NO COMMENTS

Exit mobile version