Home இலங்கை சமூகம் எல்லவில் சுற்றுலா பயணி திடீர் மரணம்: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

எல்லவில் சுற்றுலா பயணி திடீர் மரணம்: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

0

எல்ல மலைப் பகுதியில் நடை பயணம் செய்து தனது மகளின் 34 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய பிரித்தானிய பிரஜையின் மரணம் திடீர் மாரடைப்பால் ஏற்பட்டது என்று
பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் ஓக்பாத்தைச் சேர்ந்த 63 வயதான பிரட் மக்லீன் என்ற
பிரித்தானிய பிரஜை, தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாடிய வேளை எல்லவில் மர்மமான
முறையில் உயிரிழந்தார்.

அவர் கடந்த 16 ஆம் திகதி தனது மகள் நடாலி அன்னேவுடன் நாட்டுக்கு வருகை தந்து
வெலிகமவில் தங்கியிருந்தார். பின்னர் இருவரும் 23 ஆம் திகதி எல்லவுக்குச்
சென்று ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

 

பிரேத பரிசோதனை அறிக்கை

இந்நிலையிலேயே, அவர் திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து,
பண்டாரவளை நீதிவான் கெமுனு சந்திரசேகர, நீதிவான் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு
பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

பதுளை போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மரணத்துக்கான
காரணம் திடீர் மாரடைப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version