Home இலங்கை சமூகம் நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை!

நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை!

0

விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி, திடீர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் நேற்று(03) இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சோதனை நடவடிக்கை

இந்த சோதனை நடவடிக்கையில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம். அஸ்லம், ஏ. வாசித் அஹமட் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது நோன்பு கஞ்சி தயாரித்தல், விநியோகித்தல் என்பனவற்றில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெளிவூட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் என்பனவற்றில் சூடான கஞ்சி விநியோகிப்பதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் சம்பந்தமான அறிவுரைகள் சுகாதார வைத்திய அதிகாரியால் வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version