Home இலங்கை சமூகம் இலங்கையில் திடீரென கோடீஸ்வரரான நபர் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

இலங்கையில் திடீரென கோடீஸ்வரரான நபர் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

0

இரத்தினபுரி (Ratnapura) பொத்தப்பிட்டிய காவல்பிரிவிற்குட்பட்ட மெனிக்திவெல திருவானை பிரதேசத்தில் திடீரென நபர் ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர் பாரிய கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக பண மோசடி சட்டத்தின் கீழ் கண்டி (Kandy) காவல் பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அவர் குறுகிய காலப்பகுதியில் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் வீடொன்றை நிர்மாணித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்

இதற்கான பணத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் மேலும் 45 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் அவரிடம் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நபர் இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் இணைந்திருந்தமையும் பின்னர் அங்கிருந்து வெளியேறியமையும் காவல்துறையினர்  விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் குறித்த வீட்டில் இருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் பெறுமதி 22 லட்சம் ரூபாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version