Home இலங்கை அரசியல் நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடை : அநுர அரசை சாடும் சஜித்

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடை : அநுர அரசை சாடும் சஜித்

0

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் (09) ஏற்பட்ட மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித்தின் பதிவு 

அத்துடன் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவை காலங்களை நிர்வகிக்காத பலவீனமான நிர்வாகமும் மின் தடைக்கு முக்கிய காரணம் என்று சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றும் (11) நாடு முழுவதும் 90 நிமிட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version