நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்தடையால் கிளிநொச்சி(Kilinochchi) வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் பாதிக்கப்பட்ள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன், நோயாளர் விடுதி உள்ளிட்ட சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்தடை
இந்நிலையில், புதிதாக கொண்டுவரப்பட்ட மின்பிறப்பாக்கியும் பொருத்தப்படாத நிலையில் வைத்தியசாலையின் பல்வேறு சேவைகள் தடைப்பட்டுள்ளன.
மேலும், சில மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு கொண்டுவரப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
