Home இலங்கை அரசியல் நாட்டில் தொடர் மின்வெட்டு : அநுரவிற்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சி வலை

நாட்டில் தொடர் மின்வெட்டு : அநுரவிற்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சி வலை

0

நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மின்வெட்டு என்பது தற்போது பலதரப்பட்ட வகையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாணந்துறை மின் இணைப்பு துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்த நிலையில் பிறகு மீண்டும் நிலமை தற்காலிக நிலைக்கு திரும்பியது.

இருப்பினும், நேற்றைய தினமும் (10) கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலங்கள் திடீர் மின்வெட்டு காணப்பட்டது.

இந்தநிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றியும் அரசு தரப்பிலிருந்து எவ்வித முறையான காரணமும் தெரிவிக்கப்படாமலும் மின் துண்டிப்பு ஏற்படுத்தப்படுகின்றமை குறித்து சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், ஒரு சாரர் இது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசை நிலைகுலைய செய்வதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயல் என தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், இது தொடர்பில் மக்கள் தெரிவித்த நேரடி கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சி,   

https://www.youtube.com/embed/5NpYLQ6Mc0I

NO COMMENTS

Exit mobile version