நாடளாவிய ரீதியில் இன்று (09) ஏற்பட்ட மின் தடை காரணமாக இதுவரை தொடருந்து போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், தொடருந்து நிலையங்களில் அறிவிப்புகளை வெளியிட முடியாததால், தொடருந்துகளை அடையாளம் காண்பதற்கு பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் தடையை விரைவில் சரிசெய்யத் தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு சில மணிநேரங்கள் ஆகும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
