Home இலங்கை சமூகம் மன்னாரில் அவசர அவசரமாக அகற்றப்பட்ட சோதனைசாவடிகள்

மன்னாரில் அவசர அவசரமாக அகற்றப்பட்ட சோதனைசாவடிகள்

0

மன்னார் (Mannar) பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனை சாவடிகள் அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.

குறித்த சோதனை சாவடிகள் இன்றையதினம்(17) செவ்வாய்கிழமை காலை அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.

முன்னதாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மன்னார் வருகையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதனால் (Charles Nirmalanathan) வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக
குறித்த சோதனை சாவடி அகற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

சோதனைசாவடி அகற்றம்

இருப்பினும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு ஒரு வார காலத்தின் பின் மீண்டும் சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை ஒட்டி இன்றையதினம் பிரச்சார நடவடிக்கைகளுக்காக
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மன்னார் மாவட்டத்திற்கு வருகைதர உள்ள நிலையில்
பிரதான பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனை
சாவடிகள் அடையாளம் தெரியாத வகையில் வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version