Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

0

இலங்கையில் ஜூலை மாதம் இறுதி வரை எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை

எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் மற்றும் தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகி வரும் செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த நெத்திகுமாரகே, எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படும் கருத்துக்களை அவர் முற்றாக மறுத்துள்ளார். இந்த மாதம் மற்றும் ஜூலை மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான அனைத்து எரிபொருள் இருப்புக்களும் ஏற்கனவே கையிருப்பில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாதத்திற்காக எதிர்பார்க்கப்பட்ட அனைத்து எரிபொருள் கப்பல்களும் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/sufficient-fuel-stocks-until-july-in-sri-lanka-1779844932

NO COMMENTS

Exit mobile version