Home இலங்கை சமூகம் வரலாற்றில் இடம்பிடித்த தேசிய மக்கள் சக்தியின் எம்பி

வரலாற்றில் இடம்பிடித்த தேசிய மக்கள் சக்தியின் எம்பி

0

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு தனித்துவமான தருணத்தைக் குறிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி பெரேரா சபை ஒத்திவைப்பு நேரத்தில் பிரெய்லியில் எழுதப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் வரலாற்றில் முதல் முறையாக பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் பிரெய்லி முறையின் மூலம் பிரேரணையை முன்வைத்துள்ளார். 

அதிகாரமளிப்புத் திட்டம் 

தனது உரையின் போது அவர், பார்வையற்ற ஒருவர் என்ற முறையில், பிரெய்லியில் எழுதப்பட்ட சபையை ஒத்திவைக்கும் தீர்மானத்தை வாசிக்க முடிந்ததில் பெருமைப்படுவதாகக் கூறினார்.

அத்துடன், “இயலாமை இல்லாத சமூக வாழ்க்கைக்காக இலட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, உரிமைகள் அடிப்படையிலான நலன்புரி அதிகாரமளிப்புத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். 

இந்தத் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டிற்கு இணங்க உள்நாட்டுச் சட்டத்திற்கான புதிய மசோதாவை உருவாக்குவதும், மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார ஆற்றலை சமூக சீர்திருத்தத்தில் உள்வாங்குவதற்கான ஒரு திட்டமும் அடங்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version