Home இலங்கை அரசியல் ஹர்த்தாலுக்கு பின் மறைந்திருந்த சுமந்திரனின் அரசியல் இலாபம்: அம்பலமாகும் உண்மைகள்

ஹர்த்தாலுக்கு பின் மறைந்திருந்த சுமந்திரனின் அரசியல் இலாபம்: அம்பலமாகும் உண்மைகள்

0

வடக்கு கிழக்கு உட்பட கடந்த 18 ஆம் திகதி முதல் தெனனிலங்கை அரசியல் தரப்பு வரை பேசுபொருளாக மாறி இருக்கு விடயம்தான் கடையடைப்பு போராட்டம்.

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக கடந்த 18 ஆம் திகதி வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு இவ்விடயம் உள்ளாக்காப்பட்ட போதும் குறிப்பிட்ட சில இடங்களை தவிர சில இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கடையடைப்பு போராட்டத்தின் நோக்கம் மற்றும் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் அடிப்படை காரணங்களை தாண்டி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்திருந்த தனி ஒரு மனிதனான சுமந்திரன் என்பவர் பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகி இருந்தார்.

வடக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கை தரப்பு ஊடகங்களை தாண்டி நாடாளுமன்றம் வரை சுமந்திரன் பெயர் எடுத்து செல்லப்பட்டிருந்தது.

இது அவருக்கு மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக அவர் உருவாக்கிய பாதை என மக்கள் தரப்பிலும், அரசியல் ஆர்வலர்கள் தரப்பிலும் மற்றும் அரசியல் தலைமைகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இது தொடர்பிலும், முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம், சுமந்திரனின் அரசியலில் இந்த கடையடைப்பு போராட்டம் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது மற்றும் தமிழர் தரப்பில் தற்போதைய அரசியல் நிலைமை என்பவை தொடர்பில் இரேனியஸ் செல்வின் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய சக்ரவியூகம் நிகழ்ச்சி,

 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்

https://www.youtube.com/embed/DKgfLdyJ1TY

NO COMMENTS

Exit mobile version