Home சினிமா சுமதி வளவு திரைவிமர்சனம்

சுமதி வளவு திரைவிமர்சனம்

0

அர்ஜுன் அசோக், ஷிவதா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சுமதி வளவு’ மலையாள ஹாரர் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.

கதைகளம்

கேரள – தமிழக எல்லையில் அமைந்துள்ள கல்லேலி கிராமத்தில் செக்போஸ்டிற்கு மிக அருகில், சுமதி வளவு (வளைவு) என்ற இடத்தில் ஆவி உலாவுவதாக பல ஆண்டுகளாக கூறப்படுகிறது.

அதனால் 8 மணிக்கு மேல் யாரும் அந்த பக்கம் போவதில்லை, செக்போஸ்டிலும் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

இது ஒருபுறமிருக்க பேய்க்கு பயப்படும் அர்ஜுன் அசோகன் ஊரில் கேசட் கடை வைத்து ஜாலியாக சுற்றிகொண்டிருக்கிறார்.

ஆனால் மகேஷ் என்பவரின் தங்கையை அர்ஜுன் கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பமே நம்புகிறது.

இந்த சூழலில் ஊருக்கு புதுசாக வரும் எஸ்.ஐ போலீஸ் வன அதிகாரியின் பேச்சையும் மீறி சுமதி வளவிற்கும் செல்ல, அமானுஷ்ய சக்தி அவரை பயமுறுத்தி ஜீப்பை எரிக்கிறது.

அவரோ ஊராரிடம் ஏதோ சொல்லி சமாளித்துவிடுகிறார். அச்சமயம் அர்ஜுனுடன் அவருக்கு சிறு மோதல் உண்டாகிறது.

இதற்கிடையில் சுமதியின் கதையை அர்ஜுனும், அவரது நண்பர்களும் தெரிந்துகொள்ள இன்னும் பயம் அதிகரிக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் கர்ப்பிணியான ஷிவதாவை அந்த வளவு வழியாக, அர்ஜுன் இரவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.
 

ஹவுஸ் மேட்ஸ் திரை விமர்சனம்

படம் பற்றிய அலசல்

90களில் ஒரு சிறிய கிராமம்; அதைச் சுற்றி நடக்கக்கூடிய கதையில் ஹாரர் போர்ஷனை இணைத்து முடிந்த வரைக்கும் சுவாரசியமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் ஹீரோவான அர்ஜுன் அசோகன் டான்ஸ், ஆக்ஷன், நடிப்பு என அசத்தியிருக்கிறார்.

பயப்படும் இடங்களிலும் சரி, உடைந்து அழும் காட்சியிலும் சரி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

சிஜா ரோஸ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் என படத்தில் பல கதாபாத்திரங்கள்.

ஆனாலும் அவர்களுக்கு ஸ்கோப் கொடுக்கும் வகையில் காட்சிகள் உள்ளன.

படத்தில் பிரச்சனை என்னவென்றால் கதை எதை நோக்கி செல்கிறது என்பதுதான்.

திரைக்கதையும் வழக்கமான காட்சிகளை வைத்தே நகர்கிறது.

இதற்கு காரணம் ஒப்பனிங் சீனிலேயே சுமதி வளவுக்கு கொடுக்கப்பட்ட பில்டப்தான்.

அதற்கு பிறகு இடைவேளை காட்சியை தவிர பெரிய திரில் மொமெண்ட் இல்லாமலேயே காதல் படமாகதான் செல்கிறது.

என்றாலும் முடிந்தவரை டல் அடிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள் நடிகர்கள். பின்னணி இசை படத்திற்கு பக்கப்பலம். 

க்ளாப்ஸ்

நடிகர்கள்

சண்டைக்காட்சிகள்

பாடல்கள்

பல்ப்ஸ்

இன்னும் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்


மொத்தத்தில் ஆடியன்ஸை காவு வாங்குவதில் இருந்து தப்பித்திருக்கிறது இந்த சுமதி வளவு. 

NO COMMENTS

Exit mobile version