Home இலங்கை அரசியல் கடந்த 24 மணி நேரத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள்

கடந்த 24 மணி நேரத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள்

0

கடந்த 24 மணி நேரத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 65 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு சட்டத்தினை மீறியதாக 21 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதற்கமைய, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு சட்டத்தினை மீறியதாக 44 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

மொத்த எண்ணிக்கை 

கடந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 65 முறைப்பாடுகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதேவேளை, கடந்த ஜுலை 31ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 22ஆம் திகதி வரை அறிக்கையிடப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 836 என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/summary-of-election-complaint-within-last-24-hours-1724425729

NO COMMENTS

Exit mobile version