Home இலங்கை சமூகம் தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான நபர்! சிஐடிக்கு கிடைத்துள்ள அனுமதி

தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான நபர்! சிஐடிக்கு கிடைத்துள்ள அனுமதி

0

கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக நபர் பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கையை கோருவதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு குறித்த அனுமதியை வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

போதைப்பொருள் கடத்தல் 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்ததில், தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் இந்த சந்தேக நபரின் இரண்டு வங்கிக் கணக்குகள் மூலம் அதிக அளவு பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

இந்த சந்தேக நபர் செய்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் செயல்கள் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, இரண்டு வங்கிக் கணக்குகளிலும் பணம் எவ்வாறு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்பதை விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, தொடர்புடைய இரண்டு வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்து அறிக்கைகளைக் கோருமாறு இரண்டு தொடர்புடைய வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதவான், பின்னர் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version