சீரியல்
சன் டிவி சீரியலில் ஒரு கல்யாண காட்சி என்று வந்தால் ஒரு மாதம் வரை பிரச்சனைகளுக்கு அடுத்து பிரச்சனை என ஓடும்.
பின் இயக்குனர் மனம் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது என திருமணத்தை முடித்து வைப்பார். அப்படி அன்னம்-கயல்-மருமகள் மெகா சங்கமத்தில் திருமண எபிசோட் பிரச்சனைகளோடு பல வாரங்கள் ஓடி ஒருவழியாக முடிந்தது.
அடுத்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன்-பார்கவி திருமணம் நடக்குமா நடக்குமா என பெரிய எதிர்ப்பார்ப்போடு பல வாரங்கள் கடந்து ஒருவழியாக முடிந்தது.
சிங்கப்பெண்ணே
இப்போது சன் டிவியில் சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு-ஆனந்தி திருமணம் நடைபெறுமா என்ற பரபரப்பு தான் கடந்த சில நாட்களாக இருந்தது.
திடீரென வீட்டிற்கு வந்த நபர், ஷாக்கில் ஜனனி, நந்தினி, ரேணுகா… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
திருமண பேச்சு ஆரம்பித்த வேகத்தில் அன்பு-ஆனந்தி திருமணம் டக் என முடிந்துவிட்டது. நேற்றைய எபிசோடில் அன்பு ஆனந்தி கழுத்தில் உடனே தாலி கட்டிவிடுகிறார். அப்படியே அந்த பரபரப்போடு எபிசோட் முடிவடைய இன்றைய எபிசோடின் புரொமோ வந்துள்ளது.
அதில் அன்பு அம்மா சொன்னதால் தாலியை கழட்ட செல்ல ஆனந்தி அப்பா வேண்டாம் என சொன்னதால் கழட்டவில்லை. பின் ஆனந்தி என் வயிற்றில் இருப்பதை எப்படி சுமக்கிறனோ அதை போல் இதையும் ஒரு சுமையாக சுமக்கிறேன் என ஆனந்தி கூறுகிறார்.
