Home உலகம் விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா: நாசா வெளியி்டவுள்ள முக்கிய அறிவிப்பு

விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா: நாசா வெளியி்டவுள்ள முக்கிய அறிவிப்பு

0

சர்வதேச விண்வெளி மையத்தில் (International Space Station)  உள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோர் பூமிக்கு திரும்புவது எப்போது என்பது குறித்த தகவலை நாசா (NASA) இன்று தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் 5-ம் திகதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் (United States) புளோரிடா (Florida) மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 6-ம் திகதி அடைந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு 

அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் பூமிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் ஸ்டார்லைனர் விண்கலனில் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவது குறித்து காணொளி மூலமாக விளக்கம் தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/sunita-has-been-stuck-in-space-for-two-months-1723650588

NO COMMENTS

Exit mobile version