Home உலகம் கனடா – ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கனடா – ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

0

கனடா (Canada) – ரொறன்ரோவில் (Toronto) பனிப்படர்ந்த பகுதிகளில் நடமாடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறிவுறுத்தலை ரொறன்ரோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் ஆஸ்பிரிட்ஜ் விரிகுடாவின் பனிபடர்ந்த பகுதியொன்றில் வாகனம் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்திருந்துள்ளார்.

காவல்துறையினரின் அறிவுறுத்தல்

பனிக்கட்டிகள் உறுதியானவை போன்று தென்பட்டாலும் அவற்றில் ஆபத்து அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிப்படலம் எவ்வளவு செறிவானது என்பதை அறிந்து கொள்ளாது அதன் மேல் நடமாடுவது வாகனம் செலுத்துவது மிகவும் ஆபத்தானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பனி விளையாட்டுக்களில் ஈடுபடும் போதும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு ரொறன்ரோ காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

மேலும், ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக 911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version