Home உலகம் பிரித்தானியாவில் அதிகரித்து வரும் தமிழர்களின் பங்களிப்பு : சுட்டிக்காட்டிய அந்நாட்டு பிரதமர்

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் தமிழர்களின் பங்களிப்பு : சுட்டிக்காட்டிய அந்நாட்டு பிரதமர்

0

பிரித்தானியாவில் (United Kingdom) தமிழர்களின் பங்களிப்பு பாரியளவில் காணப்படுவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) சுட்டிக்காட்டியுள்ளார்.

தைத்திருநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் 

அத்தோடு, முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் (Uma Kumaran) தொடர்பில் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த உமா குமரன், ஐ.நா பொறிமுறைகளை இலங்கை தொடர்ந்தும் நிராகரித்து வருவதால் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளியுறவு விவகார குழுவின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி) குறிப்பிடுமாறு வெளியுறவு செயலாளர் டேவிட் லம்மிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version