Home இலங்கை அரசியல் சிறீதரன் எம்பியை குறிவைத்து சுமந்திரன் நடத்திய சதிகளின் பின்னணி அம்பலம்..!

சிறீதரன் எம்பியை குறிவைத்து சுமந்திரன் நடத்திய சதிகளின் பின்னணி அம்பலம்..!

0

இந்தியா – தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயலக தமிழர்கள் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக செல்லவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். 

இதனை தொடர்ந்து, சிறீதரன் ஒரு தடை செய்யப்பட்ட கனேடிய அமைப்பொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னைக்கு சென்றமையினாலேயே அவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சுமந்திரனின் இந்த கருத்து தொடர்பில் இன்றைய தினம் சிவஞானம் சிறீதரன் நாடாமன்றில் உரையாற்றும் போது சபாநாயகரிடம் ஒரு முறைப்பாடாக முன்வைத்திருந்தார். 

இவ்வாறானதொரு பின்னணியில், தமிழ்தேசியம் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவதற்கு புறம்பாக தமது கட்சிகளின் உள்ளக பிரச்சினைகளை பற்றி பேச வேண்டிய சூழலை ஏற்படுத்தி இருக்கின்றன என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி. திபாகரன் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version