Home சினிமா இப்போது எப்படி இருக்கு தெரியுமா.. சௌந்தர்யா உருக்கமான பதிவு

இப்போது எப்படி இருக்கு தெரியுமா.. சௌந்தர்யா உருக்கமான பதிவு

0

பிக் பாஸ் 8ம் சீசனில் இரண்டாம் இடம் பிடித்த சௌந்தர்யா தற்போது ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

தான் பிக் பாஸ் சென்று வந்தது தனது படம் 106 நாள் ஓடியது போல இருக்கிறது என கூறி இருக்கும் அவர், தன்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி கூறி உள்ளார்.

உருக்கமான பதிவு

சௌந்தர்யா தனது பதிவில் கூறி இருப்பதாவது..

இந்த வெற்றி, என் முதல் படம் வெளியாகி 106 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதைப் போல உள்ளது, அதன் வெற்றியைப் போலவே நான் இப்போது இந்த வெற்றியை அனுபவிக்கிறேன்.

Bigg Boss வீட்டில் இருக்கும்போது, நான் எந்த விளையாட்டையோ, டாஸ்கையோ வெல்ல முடியாமல் போயிடும் என எப்போதும் கவலைப்பட்டேன். ஆனால் இறுதிச்சுற்றிற்கு வந்தபோது, என் மனசு என்னிடம் சொன்னது, ‘நீ ஏற்கனவே மக்களின் மனசை வென்றிருக்கிறாய்,’ அதுதான் எனது உண்மையான வெற்றி. நான் மக்களை வென்றுவிட்டேன்.

என்னை இயல்பாகவே ஆதரித்து, நேசித்த உங்களைப் பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Bigg Boss என்னிடம், வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு என்னை நேசிக்கிறவர்களையா அல்லது என்னை விரும்பாதவர்களையா சந்திக்க போகிறாய் என கேட்டார். அப்போது நான், ‘என்னை நேசிக்கிறவர்களை,’ என்று சொன்னேன். ஆனால் இப்போது, எல்லோரையும் சந்திக்க தயார் — என் மனசை ஒவ்வொருவருக்கும் கொடுக்க🩷

நீங்கள் என்னை டிவி மற்றும் போனில் பார்த்து வந்தீர்கள், அடுத்து விரைவில் திரையரங்கில் உங்களை சந்திக்கிறேன் 🙂  

NO COMMENTS

Exit mobile version