Home அமெரிக்கா ட்ரம்ப் ஆட்சியின் தொடக்கம்: பதவி விலகிய விவேக் ராமசாமி

ட்ரம்ப் ஆட்சியின் தொடக்கம்: பதவி விலகிய விவேக் ராமசாமி

0

அமெரிக்காவின் (US) 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவியேற்ற சில மணித்தியாலங்களிலேயே DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி (Vivek Ramaswamy) பதவி விலகியுள்ளார்.   

அமெரிக்காவின் அரசின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக டொனால்ட் ட்ரம்பினால் DODGE துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர்களாக உலக பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித் இருவரும் கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக அதிக நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் தீவிரமாக செயற்பட்டனர். 

DOGE துறை

எலான் மஸ்க் (Elon Musk) மற்றும் விவேக் ராமசாமியின் தீவிர ஆதரவை அங்கீகரிக்கும் வகையில், ட்ரம்ப் DODGE துறையை உருவாக்கி இருவரையும் தலைவர்களாக நியமித்தார். 

இருப்பினும், தற்போது விவேக் ராமசாமி பதவி விலகுவதாக அறிவித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

குறித்த பதிவில், DOGE துறையை உருவாக்க உதவும் வாய்ப்பு, எனக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம், அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான் மஸ்க் மற்றும் குழுவினர்  வெற்றிபெறுவர் என நான் நம்புகிறேன்.

மேலும், ஓஹியோவை சார்ந்த எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நான் மிக விரைவில் அறிவிப்பேன். குறிப்பாக, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற ஜனாதிபதி, ட்ரம்பிற்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார். 

விவேக் ராமசாமியின், இந்த திடீர் தீர்மானம் குறித்து பல கேள்விகள் எழும் நிலையில், அதன் பின்னணி தொடர்பிலும் பல விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. 

NO COMMENTS

Exit mobile version