Home இலங்கை சமூகம் மதுபோதையில் விடுதியில் சிக்கிய ஜீவனின் சகா : தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதி அமைச்சரின் அதிரடி

மதுபோதையில் விடுதியில் சிக்கிய ஜீவனின் சகா : தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதி அமைச்சரின் அதிரடி

0

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய (TVTC) விடுதியில் அலுவலக நேரத்தில் மதுபோதையில் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய அங்கத்தவர் ஒருவரை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் எச்சரித்துள்ளார்.

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் ‘TVTC’ தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் செயலாளர் பிரதாப் சந்திரகீர்த்தி ஆகியோர் நேற்யைதினம் (11.12.2024) திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, தொழிற்பயிற்சி நிலைய விடுதிக்கு சென்ற பிரதி அமைச்சர், அங்கு மதுபோதையில் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரை கடுமையாக எச்சரித்துள்ளார்.

“தாங்கள் இங்கு இருப்பதற்கு என்ன காரணம் என அமைச்சர் கேல்வி ஏழுப்பியதற்கு
தனக்கு சுகயினம் காரணமாக இங்கு தாம் இளப்பாரி கொண்டிருப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.

குறித்த இடத்தில் இளப்பார முடியாதுயெனவும் தங்களுக்கு தங்களின்
உடல் நிலை சீராக இல்லாவிட்டால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற முடியும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொழில் நேர காலப்பகுதியில் இது போன்ற விடயங்களை உள்வாங்க முடியாது எனவும் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாக பிரதி அமைச்சர்
சுந்தரலிங்கம் பிரதிப் தெரிவித்துள்ளார்.

 

https://www.youtube.com/embed/34babcRsaDw

NO COMMENTS

Exit mobile version