Home இலங்கை சமூகம் 10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி!

10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி!

0

இரத்தினபுரி, கலவானை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு,நீதிமன்றம்,
500,000 ருபாய் அபராதம் விதித்துள்ளது.

70 ரூபாய் விலையை கொண்ட, 500 மில்லி லிட்டர் குடிநீர் போத்தலை
80க்கு விற்றதற்காக, கலவானை நீதிவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை
விதித்துள்ளது.

குற்றம்

பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை
அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.

இதேவேளை, இதுபோன்ற அதிக விலை நிர்ணய சம்பவங்கள் குறித்து முறையிடுமாறு,
நுகர்வோர் விவகார ஆணையகம், பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version