Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் : கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா எம்.பி

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா எம்.பி

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna)தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை இன்றைய தினம் (20.03.2025) கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் 11 சபைகளுக்கே வேட்பு மனுக்களை கையளித்துள்ளோம்.  

யாழ் மாநகர சபை வேட்பு மனு சிலவேளைகளில் நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரித்தால் கஜேந்திரகுமார் பென்னம்பலத்தின் கட்சிக்கே எமது ஆதரவை வழங்குவோம்.

அவர்களுக்கே வாக்களிக்குமாறு கோருவோம். தற்போதுள்ள தமிழ் தலைமைகளில் கஜேந்திரகுமார் பென்னம்பலமே விலை போகாதவராக இருக்கின்றார் எனவே அவருக்கே எமது ஆதரவை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள இணைப்பில் காண்க.

https://www.youtube.com/embed/Mk0HBbULVu0

NO COMMENTS

Exit mobile version