Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து தொடர்பில் உச்சநீதிமன்ற விசாரணை நிறைவு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து தொடர்பில் உச்சநீதிமன்ற விசாரணை நிறைவு

0

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை இரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்துச் செய்வதற்கான சட்டமூலமொன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மூன்று மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு

பிரதம நீதியசர் ப்ரீதி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த சட்டமுலம் தொடர்பான விசாரணைகள் தற்போதைக்கு நிறைவு செய்யப்பட்ட நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த தீர்மானம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு தொடர்பாக சபாநாயகருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான ஆட்சேபணைகள் இருப்பின் நாளை வியாழக்கிழமை (28) க்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version