Home இலங்கை சமூகம் மின்சார திருத்த முன்மொழிவு: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மின்சார திருத்த முன்மொழிவு: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

மின்சார திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பிரதிசபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் (Rizvi Salih), நாடாளுமன்றத்தில் இன்று (30) அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அரசியலமைப்பிற்கு முரணானவை என்றாலும் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் 

அதே நேரத்தில் அது வாக்கெடுப்பில் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதிசபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதை எளிய பெரும்பான்மையுடன் அங்கீகரிக்க முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக பிரதிசபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version