இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, நேற்று முன்தினம் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ள பின்னணியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பேசப்பட்ட விடயங்கள்
இதன்போது இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ள நிலையில், அங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.
இதற்கிடையே முன்னாள் கடற்படைத் தளபதியும், முன்னாள் ஆளுநருமான அட்மிரல் வசந்த கரன்னாகொடவும் சில நாட்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
