Home சினிமா சூர்யா 45 படத்தின் கதை இதுதானா.. ஆர்.ஜே. பாலாஜி செய்யப்போகும் மாஸ் சம்பவம்

சூர்யா 45 படத்தின் கதை இதுதானா.. ஆர்.ஜே. பாலாஜி செய்யப்போகும் மாஸ் சம்பவம்

0

சூர்யா 45

சூர்யா நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்திற்கு பேட்டைக்காரன், வேட்டை கருப்பு என தலைப்பு வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், சமீபத்தில் இப்படத்தின் தலைப்பை ‘கருப்பு’ என மாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வருகிற ஜூன் 20ம் தேதி படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பிறந்தநாள் அன்று அறிவிப்பு வெளிவரும் என்கின்றனர். அதை தொடர்ந்து ஜூன் 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று படத்தின் டீசர் வெளிவரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் ஸ்வாசிகா, ஷிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

கதை

இந்த நிலையில், சூர்யா 45 படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, சாமியாகவும் மனிதனாகவும் சூர்யா இப்படத்தில் வருவாராம்.

அப்படி இன்றைய காலகட்டத்தில் கடவுள் வழக்கறிஞர் அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவது போன்ற கதைதான் சூர்யா 45 என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version