Home ஏனையவை வாழ்க்கைமுறை கொழும்பின் சில உணவகங்களில் எலிகள் மற்றும் பூனைகளின் அதிக ஆதிக்கம் குறித்து தகவல்

கொழும்பின் சில உணவகங்களில் எலிகள் மற்றும் பூனைகளின் அதிக ஆதிக்கம் குறித்து தகவல்

0

கொழும்பு- புறக்கோட்டை, போதிராஜ மாவத்தையில் உள்ள பல உணவகங்களின் சுகாதார மீறல்களை, ஜிந்துபிட்டி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்று கண்டறிந்தனர்

சமையலறைப் பகுதிகளிலும், சமையல் பாத்திரங்களுக்குள்ளும் கூட எலி எச்சங்கள் இருப்பது உட்பட, சுகாதாரமற்ற நிலைமைகள் இந்த ஆய்வின்போது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உணவு தயாரிக்கும் பகுதிகளில் செல்லப் பூனைகள் சுற்றித் திரிவதும் கண்டறியப்பட்டது
இதன்போது, குறித்த சுகாதார மீறல்களுக்காக உணவக உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

வாதப்பிரதிவாதங்கள்

எனினும், எலிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மாநகரசபை மீது குற்றம் சாட்டி சிலர் தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தினர்.

இதன்போது, உணவக உரிமையாளர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே வாதப்பிரதிவாதங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சுகாதாரமற்ற நிலையில் இயங்குவதாகக் கண்டறியப்பட்ட அனைத்து உணவகங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version