Home சினிமா விஜய்யை சந்தித்த சூர்யா சேதுபதி.. என்ன கூறினார் என நெகிழ்ச்சியான பதிவு

விஜய்யை சந்தித்த சூர்யா சேதுபதி.. என்ன கூறினார் என நெகிழ்ச்சியான பதிவு

0

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி தற்போது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவர் நடித்த பீனிக்ஸ் படம் நாளை திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷனை படக்குழு தீவிரமாக செய்து வருகிறார். விஜய் சேதுபதியும் அதன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

விஜய்யை சந்தித்த சூர்யா சேதுபதி

விஜய் சேதுபதி மகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் விஜய்யின் தீவிர ரசிகன் என கூறி இருந்தார். மெர்சல் படத்தை தான் 30 முறைக்கும் மேல் பார்த்ததாகவும் கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று சூர்யா சேதுபதி மற்றும் பீனிக்ஸ் இயக்குனர் அனல் அரசு ஆகியோர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து இருக்கின்றனர்.

“நன்றி விஜய் சார். அன்பான வார்த்தைகள், hug. உங்களை நான் வியந்து பார்த்திருக்கிறேன், என் பயணத்தில் உங்களது ஆதரவை நான் எப்போதும் மறக்க மாட்டேன் தளபதி” என்ன சூர்யா சேதுபதி பதிவிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version