Home இலங்கை சமூகம் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் குடியேறிய முன்னாள் வீராங்கனை

நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் குடியேறிய முன்னாள் வீராங்கனை

0

இலங்கையின் முன்னாள் நட்சத்திர தடகள வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுசந்திகா, இலங்கையின் சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். 

திரும்பும் சாத்தியங்கள் 

சுசந்திக்கா ஜயசிங்க தனது இரண்டு பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அவர் அவுஸ்திரேலியா சென்றதாகவும் அவர் நாடு திரும்பும் சாத்தியங்கள் குறைவு எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகளின் கல்வியை கருத்திற்கொண்டு சுசந்திகா இவ்வாறு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் குடியேறிய விவகாரம் தொடர்பில் சுசந்திக்கா அதிகாரபூர்வமான அறிவிப்புக்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version