Home இலங்கை சமூகம் இலங்கை வந்த பிரான்ஸ் பெண்ணுக்கு நேர்ந்துள்ள கதி

இலங்கை வந்த பிரான்ஸ் பெண்ணுக்கு நேர்ந்துள்ள கதி

0

பிரான்ஸ் (France) பெண் ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவமானது, கண்டியில் (Kandy) குறித்த பிரான்ஸ் பெண் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

அதன் போது, கண்டி – குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண்ணை தவறான முறைக்கு உட்படுத்தியுள்ளதாக வட்ஸ்அப் ஊடாக காவல்துறையினருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கண்டி சுற்றுலா காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.  

Source: https://ibctamil.com/article/suspect-arrested-allegedly-molesting-french-woman-1728033627

NO COMMENTS

Exit mobile version