யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீட்டர்கள் கோடாவுடன் சந்தேகநபர்
ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கசிப்பு தயாரிப்பதற்காக
வைத்திருந்த கோடாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
