மாவனெல்ல பொலிஸ் பிரிவின் ஹெம்மாத்தகம பகுதியில், சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சிகரெட்டுகள்
இதன்போது கைதான சந்தேக நபரிடமிருந்து 25,250 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகபர் மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
