Home இலங்கை குற்றம் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

0

 ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த  கைது நடவடிக்கையானது போயா தினமான இன்று(7) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை குறித்த
தோட்டத்திலுள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் புதைத்து
வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றினர்.

கைது

இதன்போது, புதைத்து
வைக்கப்பட்டிருந்த 38 முழு மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

போயா தினத்தன்று உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால்,
சந்தேக நபர் அதிக விலைக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக
மதுபான போத்தல்களை வாங்கி கொண்டு வந்து தனது தோட்டத்தில் புதைத்ததாக தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக ஹட்டன் தலைமையகப் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவின்
அதிகாரிகள் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version