Home முக்கியச் செய்திகள் யாழில் நீதிமன்றம் செல்லும் வழியில் காவல்துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த கைதி

யாழில் நீதிமன்றம் செல்லும் வழியில் காவல்துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த கைதி

0

மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர்
ஒருவர் தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.

நால்வரும் கைது

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பிரதான சந்தேகநபரை
தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய காவல்துறையினர் அனுமதி கோரிய நிலையில்
மன்றும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்புகாவல் 

இந்தநிலையில், தடுப்புகாவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை நேற்று (01) மல்லாகம்
நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தப்பிச்சென்ற சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version