திருகோணமலை (Trincomalee) பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட
ஆயுதத்தை தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை திருகோணமலை – ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம்
பகுதியில் உள்ள வீடொன்றின் காணியொன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விடுதலை புலிகளால் புதைத்து
வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து இன்று (14) காலை
பெக்கோ இயந்திரம் மூலம் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இவ் அகழ்வுப்
பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈச்சிலம்பற்று காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்
மூதூர் நீதீமன்றத்தின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு உத்தரவு
இந்தநிலையில் அகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து எந்தவித தடைய பொருட்களும்
மீட்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூதூர் நீதிமன்ற நீதிபதி அகழ்வினை
இடைநிறுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு வழங்கியதையடுத்து சுமார் ஒரு மணி நேரம்
முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர், தடையில் பிரிவு காவல்துறையினர் அரச
அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
