யாழில் போதைப்பொருள் மற்றும் வாளுடன் கைதான சந்தேகநபர்கள் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழில் நேற்றுமுன் தினம் இரவு 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதானவர்கள்
ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் 23 மற்றும் 25 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை, வாள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
நீதிமன்றம் வழங்கிய அனுமதி
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 25ஆம் திகதிவரை பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸ் புலனாய்வாளர் சுதர்சனுக்கு 20 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க சந்தேகநபர்கள் முயன்றுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
