Home இலங்கை குற்றம் இரு வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

இரு வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

0

சம்மாந்துறை பொலிஸாரினால் இரு வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்
மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுளளன.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமம் 01 பகுதியில் கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி
அன்று வீடு உடைக்கப்பட்டு தொலைபேசி உட்பட பெறுமதியான பொருட்கள்
திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அளித்திருந்தார்.

மேலதிக விசாரணை

குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு
புலனாய்வு மற்றும் தேடுதல் மேற்கொண்டு 2 பேர் ஆரம்பத்தில் கைது
செய்திருந்தனர்.

இவ்வாறு கைதான வீரமுனை மற்றும் மலையடிக் கிராமம் பகுதிகளை
சேர்ந்த 2 சந்தேக நபர்கள் வசம் இருந்து இரண்டு தொலைபேசிகளை பொலிஸார்
மீட்டனர்.

இதனை
தொடர்ந்து மேற்குறித்த 2 சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போது
மற்றுமொரு சந்தேக நபரான பாண்டிருப்பு 02 பகுதியைச் சேர்ந்தவர் கைதானார்.

அத்துடன் சந்தேக நபர்கள் வசம் கொள்ளையடித்த நகைகளையும் மீட்ட சம்மாந்துறை
பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version