Home இலங்கை அரசியல் தேசியத் தலைவரின் வழி வந்த யாழ்ப்பாண தமிழன் நான்! சபையில் உரத்துக் கூறிய அர்ச்சுனா எம்.பி

தேசியத் தலைவரின் வழி வந்த யாழ்ப்பாண தமிழன் நான்! சபையில் உரத்துக் கூறிய அர்ச்சுனா எம்.பி

0

யாழ்ப்பாணத்தில் ஒரு விகாரையை இடிக்கக் கூடாது என்று கூறிய ஒரே யாழ்ப்பாணத் தமிழன் நான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஒரு சமூகத்தின் மதத்தினையும், உணர்வினையும் மதிக்கத் தெரிந்த, தேசிய தலைவரின் வரலாற்றின் வழிவந்த ஒரே, சாகவும் துணிந்த ஒரு தமிழன் நான் என்றும் அர்ச்சுனா இதன்போது கூறினார்.

மேலும், யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து தையிட்டி விகாரையை இடித்தழிக்குமாறு எனது பக்கத்தில் இருந்தவர்கள் கூறியபோது அதனை எதிர்த்தவன் நான். நான் இனவாதி அல்ல.

ஜனாதிபதி அநுரகுமாரவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை வைத்த அரசியல்வாதிகளிடம் இருந்து நான் தனித்து நிற்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

NO COMMENTS

Exit mobile version