Home இலங்கை சமூகம் தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

0

தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு 

அதன்படி இன்று (07.07.2025) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான அனைத்து இணைவழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version