Home இலங்கை சமூகம் கிளிநொச்சி- கண்டாவளை பிரதான வீதியின் திருத்த வேலைகள் இடைநிறுத்தம்

கிளிநொச்சி- கண்டாவளை பிரதான வீதியின் திருத்த வேலைகள் இடைநிறுத்தம்

0

கிளிநொச்சி – கண்டாவளை பிரதான வீதியின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு
இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் எனப்பலரும்
போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இடைநிறுத்தம்

கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு ஏ-35 வீதியின் வெலிக்கண்டல் சந்தியிலிருந்து
கண்டாவளை செல்லும் பிரதான வீதியின் புனரமைப்பு வேலைகளே இவ்வாறு இடைநடுவில் விடப்பட்டுள்ளன.

குறித்த வீதியின் திருத்த வேலைகள் இன்று வரை நிறைவுறுத்தப்படாது இடைநடுவில்
கைவிடப்பட்டுள்ளதால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை நோக்கி
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version