Home இலங்கை சமூகம் துறைமுகத்தில் தேங்கியுள்ள சந்தேகத்திற்கிடமான கொள்கலன்! பொலிஸாரின் அசமந்தம்

துறைமுகத்தில் தேங்கியுள்ள சந்தேகத்திற்கிடமான கொள்கலன்! பொலிஸாரின் அசமந்தம்

0

துறைமுகத்தில் தேங்கியுள்ள சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்று தொடர்பில் பொலிஸார் அசமந்தப்போக்குடன் நடந்து கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப் பொருள் கொள்கலன்கள் தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதமே பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , பொலிஸ் மா அதிபருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

எனினும் பொலிஸ் போதைப் பொருள் பிரிவின் அதிகாரிகள் அசமந்தமாக செயற்பட்டதன் காரணமாக குறித்த போதைப்பொருள் கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

பரிசோதிப்பதற்கான நடவடிக்கை

இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மூலமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள இன்னொரு கொள்கலன் தொடர்பான தகவல் பொலிஸ் மாஅதிபருக்கு அண்மையில் கிடைக்கப் பெற்றுள்ளது.

அது தொடர்பிலும் பொலிஸ் போதைப் பொருள் பிரிவின் அதிகாரிகள் அசமந்தமாக செயற்பட்டுள்ள விபரம் அண்மையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை குறித்த கொள்கலன் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் தலையீட்டின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களுக்குள் குறித்த கொள்கலனை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version