Home இலங்கை அரசியல் சுவசெரிய சேவையில் கைவைக்க வேண்டாம்: ஆவேசப்பட்ட ஹர்ஷ

சுவசெரிய சேவையில் கைவைக்க வேண்டாம்: ஆவேசப்பட்ட ஹர்ஷ

0

 “சுவசெரிய” (suwaseriya) சேவையில் அரசாங்கம் விளையாட வேண்டாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத விடயங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தில் (எதிர்க்கட்சி) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “நான் இது தொடர்பில் இதுவரை கதைக்கவில்லை.”சுவசெரிய” (Suvaseriya) 1990 இலவச வைத்தியசாலை அனுமதிக்கு சேவையை மாற்றுமாறு அவர்களுக்கு நேரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேர சேவை 

1990 இலக்கத்தையும் மாற்றி அதன் நிறத்தையும் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதை செய்ய வேண்டாம். எந்த பிரச்சினை என்றாலும் 1990 என்ற இலக்கத்திற்கே அழைக்கப்படுகிறது.

மக்கள் மத்தியில் இது பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளது.
24 மணி நேரமும் சேவை வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 28,000 கிலோ மீட்டர் செல்கிறது.1500க்கு மேற்பட்ட நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இன்றுவரை 2.4 மில்லியன் மக்களுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது. ஏன் இதை மாற்ற போகிறீர்கள் எதற்கு இப்படி செய்கிறீர்கள்” என்றார். 

NO COMMENTS

Exit mobile version