Home இலங்கை சமூகம் அரச பேருந்து சாரதி மீது வாள்வெட்டு விவகாரம்! விசாரணையில் சிக்கிய மூவர்

அரச பேருந்து சாரதி மீது வாள்வெட்டு விவகாரம்! விசாரணையில் சிக்கிய மூவர்

0

Courtesy: Subramaniyam Thevanthan

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வால்வெட்டு நடத்திய
பகுதி புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதால் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விசுவமடு பகுதி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வைத்து கடந்த 7 ஆம் திகதி குறித்த வாள்வெட்டு இடம்பெற்றிருந்தது.

இதன் காரணமாக பேருத்தில் பயணிகள் நடுவீதியில் நிர்க்கதிக்குள்ளாகினர்.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற அரச பேருந்தின் சாரதி மீது விசுவமடுப்பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் இவ்வாறு வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுண்டிருந்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version